டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கொசுப்புழு வளரும் இடங்கள் ஆய்வு இதுவரை 32 லட்சம் அபராதம்

சென்னை , அக். 07: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இதுவரை ரூ.32லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித் துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணை யாளர் லலிதா (பொறுப்பு) வெளியிட் டுள்ள அறிக்கை : சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் 2,056 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ் வொரு வட்டத்திற்கும் சுமாராக 500 வீடுகளாக வரையறுக்கப்பட்டு, வாரந்தோறும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங் கிணைந்த நோய்கள் கண்காணிப்பு திட்டம் மூலம் தின மும் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் டெங்கு காய்ச்சலினால் சிகிச்சை மேற்கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டு, அவை மண்டல வாரியாக மேல் நட வடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக் கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று தகவல்கள் சேகரிக்கப்ப டுகிறது. தற்போது பருவமழையை முன் னிட்டு நன்னீர் குளங்கள், நன்னீர் தேக்கங்கள் போன்ற இ ட ங் க ளில் கொசுப்புழுக்களை உண்ணும் கம்புசியா மீன்கள் விடப்பட் டுள்ளன. மேலும் பள்ளிகளில் மாணவர் களுக்கு விழிப் புணர்வு கல்வி, பொது சுகாதாரத் துறை யினரால் வழங்கப்பட்டு வருகிறன. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, கட்டிடத்தின் உரிமை யாளர்களுக்கு இதுவரை அபராத தொகையாக ரூ.32,74,700 விதிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்நாள் வரை 8,929 புதிய கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 3,043 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 993 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில், காய்ச்சல் கண்ட 531 பேருக்கு சிகிச்சையளிக் கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 96 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள் ளார்.