சுதந்திர இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சியில் உள்ள கலையரங்கத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தோட்டனூத்து ஊராட்சி தலைவி சித்ரா ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தோட்டனூத்து ஊராட்சி செயலாளர் தாமஸ் முன்னிலை வகித்து பல்வேறு தீர்மானங்களை வாசித்தார். . ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக குடிநீர், தெருக்களில் பேவர்பிளாக் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை எழுதி வாசித்து ஒப்புதல் பெற்றார். இதில் இக்கூட்டத்தில் மழைநீர் சேகரிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர். சுகாதாரத்தை பேணி காப்போம் , பாலியல் ஒழிப்போம். உள்ளிட்ட உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. இதில் புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் தங்களை பொதுமக்கள் முன்பு அறிமுகப்படுத்தி கொண்டனர். இதில் யூனியன் அலுவலக ஊழியர் ஜோதி , மாற்றுத்திறனாளி நல அலுவலர் பெர்சியாலெனின்சோபியா , சுகாதார அலுவலர் ஜோதி உட்பட தோட்டனூத்து ஊராட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.