சென்னை பிளாக்கத்தான்"

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் பங்களிப்புடன் பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க """"பிளாக்கிங்"" (ஞடடிபபiபே) உடற்பயிற்சி முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த """" என்ற நிகழ்ச்சி 02.02.2020 ஞாயிற்று கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அடையாறு மண்டலத்திலுள்ள எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த விளம்பர பதாகையை ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.01.2020) ரிப்பன் மாளிகை வளாகத்தில் வெளியிட்டு செய்தியாளர்களிடம் இந்நிகழ்ச்சி குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 5200 மெட்ரிக் அளவிலான திடக்கழிவுகள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுகின்றன. இத்திடக்கழிவுகள் மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 500 மெட்ரிக்டன் அளவிலான மக்கும் கழிவுகள் இயற்கை உரம் போன்ற பயனுள்ள பொருட்களாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும், 2000 மெட்ரிக்டன் அளவிலான மக்கும் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மறு சுழற்சி செய்து கையாளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதே போன்று 500 மெட்ரிக்டன் அளவிலான மக்காத கழிவுகள் மறுசுழற்சியாளர்களிடம் மறு பயன்பாட்டிற்காக வழங்கப்படுகின்றன. மேலும், 2000 மெட்ரிக்டன் அளவிலான மக்காத கழிவுகளை விஞ்ஞான ரீதியில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கையாண்டு மறு சுழற்சி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
மேலும், மக்காத கழிவு பொருட்களை மறு சுழற்சி செய்ய ஏதுவாக இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை கழிவு பரிமாற்றம் (ஆயனசயள றுயளவந நுஒஉhயபேந) என்ற இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மறு சுழற்சியாளர்கள் சென்னை மாநகராட்சி வசமுள்ள மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் எந்தெந்த இடங்களில் எவ்வளவு அளவு உள்ளது என்பதனை அறிந்து கொண்டு இணையதளத்தின் வழியாகவே தகுந்த கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் இதுவரை 1000 கொள்முதல் செய்பவர்களும் 300 விற்பனை செய்வர்களும் இதுவரை பதிவு செய்துள்ளனர். இதுவரை தேங்காய் நார், மட்டை உட்பட 2000 மெட்ரிக்டன் அளவிலான பொருட்கள் இந்த இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு நுகர்வோரிடையே நல்ல வரவேற்பு உள்ளது.


பொதுமக்கள் எனது குப்பை! எனது பொறுப்பு! என தங்களின் கடமையை உணர்ந்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் பொதுமக்களிடையே திடக்கழிவுகளை கையாள்வது குறித்தும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் விழப்புணர்வு ஏற்படுத்துவதே பிளாக்கத்தான் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
""""பிளாக்கிங்"" (ஞடடிபபiபே) என்றால் ஆங்கிலத்தில் """"யீiஉம ரயீ"" யனே """"தடிபபiபே"" என்பதே """"ஞடடிபபiபே"" என்றழைக்கப்படுகிறது. நடைப்பயிற்சி / சீரான ஓடுபயிற்சி மேற்கொள்ளும்போதே இடையிடையே நின்று, குனிந்து, உட்கார்ந்து கோணிப்பையில் குப்பையை சேகரிக்கும் ஒரு உடற்பயிற்சி தொகுப்பு முறையே """"பிளாக்கிங்"" (ஞடடிபபiபே) ஆகும். இப்புதுமையான குப்பை அள்ளும் விழிப்புணர்வு பயிற்சி கடந்த 2016ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் முதன்முறையாக நடைமுறைபடுத்தப்பட்டது.  தற்போது இது உலகளவில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிளாக்கிங் விளையாட்டின் மூலம் உடலை வளைத்தல்,  நீட்டுதல், உட்காருதல், குதித்தல் மற்றும் நடத்தல் போன்ற செயல்கள் இருப்பதால், உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும், முக்கியமாக ஓடுவது, நடப்பது போன்ற உடற்பயிற்சியைவிட சிறந்த பயிற்சியாகவும் உள்ளது.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் சார்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் பொது இடங்களை தூய்மையாக பராமரிக்கும் """"சென்னை பிளாக்கத்தான்"" (ஊhநnயேi ஞடடிபபயவாடிn) நிகழ்ச்சி அடையாறு மண்டலம் எலியட்ஸ் கடற்கரையில் 02.02.2020 ஞாயிற்று கிழமை அன்று காலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் றறற.உhநnயேiயீடடிபபயவாடிn.உடிஅ ஈhவவயீ://றறற.உhநnயேiயீடடிபபயவாடிn.உடிஅழூ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.  இதில் பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது. இதுவரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 1500 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் 3000 முதல் 4000 நபர்கள் வரை கலந்து கொள்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்சியை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொது இயக்கமாக மாற்றி இதை ஆசிய சாதனை புத்தகத்தில் (ஹளயை க்ஷடிடிம டிக சுநஉடிசன) இடம் பெற செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பொதுமக்கள், பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள், குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் உட்பட தன்னார்வலர்கள் அதிக அளவில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்க தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என ஆணையாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) திரு.பி.மதுசுதன் ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.