மக்கள் நலம் காக்கும் பணியில் தொண்டாற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா







































*ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா ,நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, மற்றும் மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா  நடைபெற்றது.

 

 *திருச்சி கிழக்குத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி தலைமை வகித்து மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன்  செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர்களின் மனப்பான்மையை பாராட்டி 50 நபர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்*

*நேரு யுவகேந்திரா முன்னாள் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார் 

 

தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் முரளிகிருஷ்ணன், தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் மோகன், தமிழ்நாடு மக்கள் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொன் குணசீலன்* *திருச்சி தொழில் அதிபர் மதிவாணன் அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியர் மணி,சமூக ஆர்வலர் நடிகர் ஆர்.ஏ.தாமஸ், அய்யாரப்பன், அமிர்தா யோகமந்திரம் யோகா பயிற்றுனர் விஜயகுமார் , மாரிக்கண்ணு, தீபலட்சுமி, கார்த்தி, செல்லக்குட்டி, ராஜசேகரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்* *வீடுதோறும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது*

 

*சமூகச் ஆர்வலர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டு சான்றிதழும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

*ஒயிட் ரோஸ் பொது நலச்சங்க தலைவர் சங்கர், நேரு யூத்  வெல்பர் கிளப் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்.